நடிப்புக்கு ஸ்வாக சொன்ன மனீஷா யாதவ்

காதல் படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மனீஷா யாதவ். அதன்பிறகு சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர் மற்றும் ஜன்னல் ஓரம், திரிஷா
இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்தார். எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் இல்லாததால் கிளாமருக்கும் மாறினார் மனீஷா. ஆனபோதும் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திற்கு பிறகு அவருக்கு சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் அயிட்டம் பாடலுக்கு ஆடும் வாய்ப்பும், வடிவுடையானின் பொட்டு படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பும்தான் கிடைத்தது.

மற்றபடி மீண்டும் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லையாம். அதனால் பல மாதங்களாக காத்திருந்த மனீஷா யாதவ், இனிமேலும் சினிமாவை நம்பி காலம் கடத்த வேண்டாம் என்று திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கப்போட முடிவெடுத்து விட்டாராம். இன்னும் சில மாதங்களில் அவரது சொந்த ஊரான பெங்களூரைச்சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கும், மனீஷா யாதவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget