விண்டோஸ் டிபண்டர் அப்ளிகேஷன் புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலியில் சில ஆண்டுகளாகவே நமக்குக் கிடைத்து வருகிறது.
ஆனால், இது விரைவில் விண்டோஸ் அப்ளிகேஷனாகவே மாற உள்ளது. எதிர்காலத்தில் தற்போது விண்டோஸ் டிபண்டர் செயலியில் உள்ள இன்டர்பேஸ் இருக்காது. முற்றிலும் மாறுபட்ட நிலையில் கிடைக்கும் ஓர் அப்ளிகேஷனாக அமையும். இதன் முந்தைய நிலை குறித்தும், இனி வருங்காலத்தில் எப்படி அமைய உள்ளது என்றும் இங்கு பார்க்கலாம்.
2004 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனம் GIANT Anti-Spyware என்ற நிறுவனத்தை வாங்கியது. பின்னர் அதனை மைக்ரோசாப்ட் புரோகிராமாக மாற்றத் தொடங்கியது. Microsoft AntiSpyware என்று பெயரிட்டு, அதனை ஒரு சோதனைத் தொகுப்பாகத் தந்தது. பல ஆண்டுகள் அது சோதனைத் தொகுப்பாகவே இருந்தது. இறுதியாக, 2006ல், Windows Defender என்ற பெயரில், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் சர்வர் 2003 ஆகியவற்றுக்கு AntiSpyware தொகுப்பாகத் தந்தது. முதன் முதலில், விண்டோஸ் டிபண்டர் தொகுப்பின் பணி இப்படித்தான் இருந்தது.
பின்னர், 2007ல் விண்டோஸ் விஸ்டா இயக்க முறைமை வெளியான போது, விண்டோஸ் டிபண்டர் இயக்கத்தினுள்ளாகவே அமைக்கப்பட்டது. இதன் மூலம் இயக்க முறைமையின் ஓர் அங்கமாக இது நிலை பெற்றது. மாறா நிலையில், Spyware Protection என்னும் பிரிவில், Security Center என்னும் மையமாக இது அமைக்கப்பட்டது. இருப்பினும், இன்னும் ஒரு தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்று வேண்டும் எனப் பயனாளர்கள் எண்ணினார்கள்.
விண்டோஸ் 7 இயக்க முறைமை வந்த போதும், விண்டோஸ் டிபண்டர், அதனுள் ஓர் பிரிவாக இருந்தது. ஆனால், ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தாக்கும் மால்வேர் புரோகிராம்களையும், வைரஸ் புரோகிராம்களையும் தடுக்க வல்லமை படைத்ததாக விண்டோஸ் டிபண்டர் இல்லை என்பதை, மைக்ரோசாப்ட் நிறுவனம் உணர்ந்திருந்தது.
விண்டோஸ் 7 பயனாளர்களிடையே பரவத் தொடங்கியவுடன், மைக்ரோசாப்ட், Microsoft Security Essentials என்னும் பாதுகாப்பு தரும் புரோகிராம் ஒன்றினை இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் தந்தது. இது, கம்ப்யூட்டர் வைரஸ், ஸ்பைவேர், ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் மற்றும் ரூட் கிட்ஸ் போன்ற வைரஸ்களுக்கு எதிரானதாக இது இயங்கும் என அறிவிக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராம் இயங்கத் தொடங்குகையில், விண்டோஸ் டிபண்டர் செயலியின் இயக்கத்தினை நிறுத்தி, அனைத்து மால்வேர் புரோகிராம்களை எதிர்கொள்ளும் வேலையை மேற்கொண்டது.
விண்டோஸ் 8 இயக்கத் தொகுப்பு, 2012 ஆம் ஆண்டில் வெளியானபோது, Windows Defender என்னும் சாதனத்தோடுதான் இருந்தது. இதில் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராம் கொண்டிருந்த பாதுகாப்பு அம்சங்களே இருந்தன. எனவே, விண்டோஸ் டிபண்டர் தனி ஒரு டூலாக அமைந்தது, விண்டோஸ் 8 இயக்க முறைமையுடன் தான்.
விண்டோஸ் 10 இயக்க முறைமை, 2015ல் வெளியான போது, விண்டோஸ் 8ல் இருந்த விண்டோஸ் டிபண்டர் செயலியைக் கொண்டதாகவே இருந்தது. ஆனால், இதன் செட்டிங்ஸ் அமைப்பு, விண்டோஸ் 10 செட்டிங்ஸ் அமைப்புடன் ஒருங்கிணைந்ததாக அமைந்திருந்தது. இயக்க செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, செயல்பாட்டில் மாறுதல்கள் இருப்பின், அது மால்வேர் புரோகிராமின் தாக்கத்தினாலா என்று அறியும் அம்சங்கள் கொண்டிருந்தது.
விண்டோஸ் 10 இயக்கத்தில் உள்ள விண்டோஸ் டிபண்டர் செயலியின் இன்னொரு முக்கிய அம்சம் அதன் “க்ளவ்ட் பாதுகாப்பு அமைப்பு” ஆகும். அத்துடன், இயங்கும் கம்ப்யூட்டரில், மால்வேர் சார்ந்த செயல்பாடுகள் தென்பட்டால், அது குறித்த டேட்டாக்களை, மைக்ரோசாப்ட் மால்வேர் பாதுகாப்பு மையத்திற்கு (Microsoft's Malware Protection Center) அனுப்பியது. இதனால், மைக்ரோசாப்ட், புதிய மால்வேர் புரோகிராம்கள் வரும்போதெல்லாம், அதனை அறியும் முதல் நிறுவன அமைப்பாக இருக்கிறது. அவற்றின் அடிப்படையில், விண்டோஸ் டிபண்டர் செயலியின் பாதுகாப்பு திறனைத் தொடர்ந்து புதுப்பிக்கும் வழியைக் கொண்டுள்ளது.
விண்டோஸ் இயக்க முறைமை இயங்கிக் கொண்டிருக்கும்போது சில கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களை நீக்குவது மிகவும் எளிதான செயலாக அமையாது. எனவே, விண்டோஸ் டிபண்டர் செயலியில் ஒரு Offline mode அறிமுகமானது. இது நம் பெர்சனல் கம்ப்யூட்டரை, கம்ப்யூட்டரில் முழுமையான செயல்பாடு தொடங்கும் முன்னர் இயக்கி, அதனை முழுமையாக ஸ்கேன் செய்கிறது. நம் கம்ப்யூட்டரில், ஏதேனும் பிற நிறுவனத்தின் ஆண்டி வைரஸ் தொகுப்பினை நிறுவிச் செயல்படுத்தினால், விண்டோஸ் டிபண்டர் ஒதுங்கிக் கொள்ளும். இருப்பினும், Limited Periodic Scanning என்னும் கூடுதல் அமைப்பினை உருவாக்கிக் காட்டும். இதனை நாம் இயக்கினால், நாம் சிஸ்டத்தைப் பயன்படுத்தாத போது, நம் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஸ்கேன் செய்யாத போது, தானாகவே இயங்கி கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, மால்வேர் புரோகிராம் எதனையாவது நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் விட்டுவிட்டதா என்று ஆய்வு செய்து, அதற்கேற்ற செயல்பாட்டினை மேற்கொள்ளும்.
இதுவரை, விண்டோஸ் 10 இயங்கி வரும் உங்கள் கம்ப்யூட்டரில், மேலும் ஒரு தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பதிந்து இயக்கி வரும் நிலையில், விண்டோஸ் டிபண்டர் தரும் Limited Periodic Scanning என்ற செயலியை இயக்கி வைக்கவும். இதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டருக்கு இரு தொகுப்புகளின் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

கருத்துரையிடுக