அம்மா வேடத்தில் அசத்தும் சித்தாரா

கே.பாலசந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் படத்தில் அறிமுகமானவர் கேரளத்து நடிகை சித்தாரா. அதன்பிறகு விக்ரமனின் புது வசந்தம்
படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமானவர். புரியாத புதிர், அர்ச்சனா ஐஏஎஸ் உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தார். அதையடுத்து படையப்பாவில் தங்கை வேடத்தில் நடித்தவர், கேரக்டர் நடிகையாக உருவெடுத்து தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில், பூஜை படத்தில் நடித்தவர் தெலுங்கில் ஜனதா கேரேஜ் படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவர் நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தில் ஹீரோஆரிக்கு அம்மாவாக நடித்துக்கொண்டிருக்கிறார். காதல் கதையில் உருவாகும் இந்த படத்தில் அம்மா- மகன் சம்பந்தப்பட்ட செண்டிமென்ட் காட்சிகளும் நிறைய உள்ளதாம். அதனால், சில காட்சிகளில் கண்கலங்க வைக்கும்படியாக உணர்வுப்பூர்வமாக நடித்துள்ள சித்தாராவுக்கு இந்த படம் வெளியாகும்போது அம்மா வேடங்களில் நடிக்க அதிகமான வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். ஆக, சமீபகாலமாக அம்மா வேடங்களில் நடித்து வரும் ராதிகா, ஊர்வசி, ரம்யா கிருஷ்ணன், நதியா போன்ற மாஜி ஹீரோயினிகள் பட்டியலில் சித்தாராவும் இணைந்துள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget