சின்னத்திரை நாயகி பவித்ரா

தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பவித்ரா. ரியலாட்டி ஷோ ஸ்பெஷலிஸ்ட் என்றும் பெயர் எடுத்தவர். ஆனால் தற்போது சீரியல் நடிகையாகியிருக்கிறார். விஜய் டி.வியில்
சரவணன் மீனாட்சி, ஜீ தமிழ் சேனலில் மெல்ல திறந்தது கதவு தொடர்களில் நடித்து வருகிறார்.

தொகுப்பாளினி, நடிகை என இந்த இரண்டுக்கும் நடுவில் படிப்பையும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது எம்.பி.ஏ இறுதியாண்டு படித்து வரும் பவித்ரா. அடுத்து எம்.பில் பட்டதுக்காக ஆராய்ச்சியில் இறங்கப்போகிறார். "ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களில் நடித்தாலும் இரண்டிலும் வித்தியாசமான கேரக்டர்கள். சரவணன் மீனாட்சியில் ராஜி என்கிற மாற்றுத் திறனாளி பெண்ணாக நடிக்கிறேன். வெளியில் சென்றால் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு நிஜமாகவே நீங்க மாற்றுத் திறனாளி இல்லையே என்று கேட்கிறார்கள். இதுதான் என் நடிப்புக்கு கிடைத்த வெற்றி. மெல்ல திறந்தது கதவு தொடரில் தெனாவெட்டான அல்ட்ரா மார்டன் பொண்ணு. இரண்டையும் சவாலா எடுத்துக்கிட்டு பண்றேன். மற்றபடி படிப்பு என்கிறது என்னோட ட்ரீம். அதை என்றைக்கும் விட மாட்டேன். நிறைய படிக்கணும், நிறைய நடிக்கணும் இதுதான் என்னோட ஆசை" என்கிறார் பவித்ரா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget