கோலிவுட் கோதாவில் காயத்ரி அய்யர்

பாகன், அவன் இவன், தெகிடி படங்களில் நடித்த ஜனனி அய்யர், அதன்பிறகு தமிழ் படவாய்ப்புகள் இல்லாததால் மலையாளத்துக்கு இடம்பெயர்ந்தார். போன வேகத்திலேயே ஐந்து படங்களில் நடித்து
தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டவர் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வருகிறார். இந்தநேரத்தில் தமிழில் இருந்து சில படவாய்ப்புகள் கிடைத்ததால் தற்போது, தொலைக்காட்சி, அதே கண்கள், பலூன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஆரம்பத்தில் தனது பெயருடன் அய்யர் என்பதை அவர் இணைத்திருப்பதற்கு சிலர் விமர்சித்தபோதும், அதைக்கண்டு கலங்காமல் இப்போதுவரை அவர் ஜனனி அய்யராகவே நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்த டூரிங் டாக்கீஸ், சாயா உள்பட சில படங்களில் நடித்துள்ள காயத்ரியும் தனது பெயருடன் அய்யரை சேர்த்து காயத்ரி அய்யராகி விட்டார். இதற்கு முக்கிய காரணம், காயத்ரி என்ற பெயரில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி உள்பட சில படங்களில் நடித்த காயத்ரி உள்பட மேலும் சில நடிகைகளும் பீல்டில் இருப்பதால், ஒரே பெயரினால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்பதால் இப்படி காயத்ரியுடன் அய்யரை இணைத்துள்ளாராம் அவர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget