மம்மி வேடத்தில் ஜிம்மியான ரித்திகா

மாயா படத்தைத் தொடர்ந்து இமைக்கா நொடிகள் படத்திலும் குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள நெஞ்சம
மறப்பதில்லை படத்தில் அட்டகத்தி நந்திதாவும் ஒரு குழந்தைக்கு அம்மாவாகத்தான் நடித்துள்ளார். ஆனால் இவர்களெல்லாம் பல வருடங்களாக நாயகியாக நடித்தவர்கள். ஆனால் தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் நடிகையான இறுதிச்சுற்று ரித்திகா சிங் ஒரு படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார்.

மேலும், மாதவனுடன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீ-மேக்கிலும் வெங்கடேசுடன் நடித்துள்ள ரித்திகா சிங், தமிழில் ஆண்டவன் கட்டளையைத் தொடர்ந்து தற்போது சிவலிங்காவில் நடித்திருக்கிறார். இதையடுத்து நான் அவனில்லை-2 படத்தை அடுத்து செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் ரித்திகாசிங். முதலில் இந்த வேடத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்தபோது தயங்கினார்களாம். ஆனால் முழுக்கதையையும் கேட்ட ரித்திகாசிங், தன்னைச் சுற்றியே நடக்கும் கதை என்பதால் அம்மா வேடம் என்றபோதும் துளியும் தயங்காமல் ஓகே சொல்லி விட்டாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget