யோகா டீச்சரான மஞ்சு

ஆடுகளம், மாற்றான் உள்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் மஞ்சு. தற்போது ஆயுதம், வெகுளி, நகர்ப்புறம், ஆளில்லாத ஊரில் அண்ணன் தான் எம்எல்ஏ, தலையாட்டி
பொம்மைகள், திருவாசகமும் தேன்மொழியும் என பல படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார். மேலும், கோவை சரளா நடிக்கயிருந்த ஒரு வேடம் தனக்கு கிடைத்ததை பெருமையாக கருதுவதாக சொல்கிறார்.

அதுகுறித்து மஞ்சு கூறும்போது, நான் இதுவரை அக்கா, அண்ணி, ஆசிரியை, நகைச்சுவை, வில்லி என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். தற்போது வெகுளி என்ற படத்தில் யோகா டீச்சராக நடிக்கிறேன். அந்த கேரக்டருக்கேற்ப ஓரளவு கிளாமராகவும் நடிக்கிறேன். மேலும், ஆயுதம் என்றொரு படத்தில் கோவை சரளா நடிக்கயிருந்த வேடத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த ஹாரர் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறேன். என்னை சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளது. என்னால் கோவைசரளா மாதிரி நடிக்க முடியாது என்றாலும், குறையில்லாத அளவுக்கு நடித்து வருகிறேன். அதற்கு ஸ்பாட்டில் கைதட்டலும் கிடைத்து வருகிறது.

மேலும், நதியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை மாதிரி போல்டான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. என்னை அதிகமாக இம்ப்ரஸ் செய்த அவர்தான் எனது ரோல் மாடல். அதனால் எதிர்காலத்தில் நதியா நடித்து வருவது போன்று அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிப்பேன் என்கிறார் மஞ்சு.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget