முத்த காட்சியில் மல்லு கட்டிய சாந்தினி

`ஜாக்சன் துரை' படத்திற்கு தரணிதரன் இயக்கி வரும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. இந்தப் படத்தில் 'மெட்ரோ' புகழ் சிரிஷ்  நாயகனாகவும், `சித்து +2', புகழ் சந்தினி தமிழரசன் நாயகியாகவும் நடித்து
வருகின்றனர். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ்  இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

குற்றப் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட  படப்பிடிப்பு வரும் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், ராஜா ரங்குஸ்கி படம் குறித்து தரணிதரன் கூறியதாவது,

கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் இதே வேகத்தில் முடிக்க  திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிரிஷ் முத்தக்காட்சியில் நடிக்க மட்டும் பதட்டப்படுகிறார்.  படத்தின் ஒரு காட்சியில் சாந்தினியை முத்தமிட வேண்டும். அந்த முத்தக்காட்சிக்காக சிரிஷ் சுமார் 19 டேக் எடுத்ததாக  தரணிதரன் தெரிவித்தார். 19 முறை முத்தமிட்டதை வேண்டுமென்றே செய்தாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும்  என்றும் தரணிதரன் சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget