பட்டதாரி படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதிமேனன். அதையடுத்து அமீர் இயக்கும் சந்தனத்தேவன் படத்தில் நடிக்கிறார். 1980களில் நடக்கும் பீரியட் கதையில் உருவாகும் இந்த
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 21-ந்தேதி முதல் மதுரையில் தொடங்கியது. அப்போது யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ஒரு டூயட் பாடலை படமாக்கியிருக்கிறார் அமீர்.
அந்த பாடல் காட்சியில் நடித்தது பற்றி அதிதிமேனன் கூறுகையில், கேரளத்து பெண்ணான நான், இந்த படத்தில் பக்கா மதுரைப்பெண்ணாக நடிக்கிறேன். கதைப்படி, ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன். மற்றபடி படத்தில் நான் எந்தமாதிரியான ரோலில் நடிக்கிறேன் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மேலும், இந்த பாடல் காட்சியில் ஆர்யா, சத்யா, நான் மற்றும் இன்னொரு புதுமுக நடிகை ஆகியோர் இணைந்து நடனமாடினோம்.
இந்த பாடல் காட்சிக்காக நான் கண்டாங்கி சேலை கட்டி நடித்தேன். என்னை அந்த கெட்டப்பில் முற்றிலுமாக மாற்றி விட்டார்கள். என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக கண்டாங்கி சேலை கட்டியது இப்போதுதான். நானே அசந்து போகும் அளவுக்கு மாறியிருந்தேன். அந்த கெட்டப்பில் மெலோடிப்பாடலுக்கு நடனமாடியது நல்ல இனிமையான அனுபவமாக அமைந்தது. இதையடுத்து மார்ச் முதல் வாரத்தில் சந்தனத் தேவன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் மீண் டும் கலந்து கொள்கிறேன். ஏப்ரல் முதல் வாரம் வரை தொடர்ந்து அப்படத்தில் நடிக்கிறேன் என்கிறார் அதிதிமேனன்.

கருத்துரையிடுக