ஹீரோயினி கதையில் நானா ஐஸ்வர்யா

விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. அதையடுத்து அப்பா அர்ஜூன்
இயக்கும் காதலின் பொன் வீதியில் படத்தில் தற்போது நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சாந்தன் என்ற புதுமுக ஹீரோவாக நடிக்கிறார். ஆக்சன் ஹீரோவான அர்ஜூன் இதற்கு முன்பு பல படங்களை இயக்கி நடித்திருக்கிறார். என்றபோதும் அந்த படங்களில் ஆக்சன் இருந்தது. ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க காதல் மட்டுமே உள்ளதாம்.

இந்த படம் பற்றி ஐஸ்வர்யா அர்ஜூன் கூறும்போது, காதலின் பொன் வீதியில் படம் பியூர் லவ் சப்ஜெக்ட். மேலும், இந்த படத்தை ஹீரோயின் கதை என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் ஹீரோ-ஹீரோயினி இருவருக்குமே சமஅளவிலான கேரக்டர்தான். இதில் நான் ஒரு பொறுப்புள்ள நிருபராக நடிக்கிறேன். டெப்த்தான இந்த கதையில் அழுத்தமான வேடம் எனக்கு. அதனால் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கிறேன்.

மேலும், என் தந்தை என்னதான் நடிகராக இருந்தாலும் அவர் என் அப்பா என்பதால் முதலில் ரொமான்ஸ் காட்சிகளில் அவர் முன்பு நடிப்பதில் சற்று தயக்கமாகவே இருந்தது. ஆனால் அவர் ஒரு தந்தை என்பதை மறந்து செட்டில் டைரக்டராகவே வேலை வாங்குவதால், ஒருகட்டத்தில் நானும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தேன். முக்கியமாக, எனது தாத்தா தொடங்கி அப்பா-அம்மா, உறவினர்கள் என பலரும் சினிமாவில் நடிகர்களாக இருப்பதால் அந்த சூழலிலேயே வளர்ந்த எனக்கு ரொமான்ஸ் காட்சிகளில் அப்பா முன்பு நடிப்பதில் ஏற்பட்ட தயக்கமானது சீக்கிரமே போய் விட்டது என்கிறார் ஐஸ்வர்யா அர்ஜூன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget