ராஜூ முருகன் இயக்கிய குக்கூ படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் மாளவிகா நாயர். கேரளாவைச் சேர்ந்த
இவர் டெல்லியில் படித்து வருகிறார். படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் சினிமாவில் நடித்தார். மலையாளத்தில் உஸ்தாக் ஓட்டல், கர்மயோதா, புதிய தீரங்கள், பிளாக் பட்டர்பிளை படங்களில் நடித்தவர் அதன் பிறகு குக்கூ படத்தில் நடித்தார். அதன் பிறகு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தவர் தமிழ் படம் எதிலும் ஒப்புக் கொள்ளாமல் படிக்கச் சென்றுவிட்டார். இனி படித்து முடித்துவிட்டுதான் நடிப்பேன் என்றார். இப்போது படிப்பபு முடிந்து விட்டதால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கும் படமான அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஜதந்திரம் படத்தில் நடித்த வீரா நடிக்கிறார். புதுமுக இயக்குனர் அவினாஷ் ஹரிகரன் இயக்குகிறார். இது அரசியல் பின்னணியில் நடக்கும் காமெடி கதை. இதில் அரசியல்வாதி மகளாக மாளவிகா நாயர் நடிக்கிறார்.

கருத்துரையிடுக