மசாலா மோர் செய்வது எப்படி

தற்போது மற்ற காலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அனைத்து காலங்களிலும் மோர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இன்று
மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கெட்டித் தயிர் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

பச்சை மிளகாய் - 1/2
கறிவேப்பிலை - 3 இலை
இஞ்சி - 1/4 இன்ச்

செய்முறை:

* தயிரை ஒரு பௌலில் போட்டு, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

* அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

* கடைந்து வைத்துள்ளதை மோரில் அரைத்த விழுது, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget