தமிழ் ஆசையில் டாப்ஸி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. அதன் பின் “வந்தான்
வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை” ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் ஹிந்தியில் 'பேபி, பின்க், ரன்னிங் ஷாதி, தட்கா' என தொடர்ச்சியாக நடித்து அங்கு பிஸியாக இருக்கிறார்.

டாப்ஸி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'நாம் ஷபானா' படம் தமிழில் 'நான்தான் ஷபானா' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்தவர் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

“தமிழில் அறிமுகமாகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும் குறைவான படங்களிலேயே நடித்திருக்கிறேன். நான் நடித்த 5 படங்களில் 4 படங்கள் வெற்றிப் படங்கள்தான். ஆனாலும், என்னைத் தேடி வாய்ப்புகள் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. இங்கு தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன்.

தமிழில் என்னை பக்கத்து வீட்டுப் பெண் போல பார்க்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால், ஹிந்தியில் என்னைத் தேடி வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள்தான்.

வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களின் படங்களில் கதை கேட்காமலே கூட நடிப்பேன். ஏனென்றால் அவர்கள் எப்படிப்பட்ட படங்களைத் தருவார்கள் என்பது தெரியும். 'ஆடுகளம்' படத்தில் என்னைத் தவிர பலருக்கு தேசிய விருது கிடைத்தது. வெற்றிமாறனிடமும் எனக்கு ஒரு தேசிய விருதை நீங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.

ஒரு திரைப்படத்திற்கும், சிறந்த கதாபாத்திரங்களை உருவாக்குவதற்கும் இயக்குனர்கள்தான் முக்கியக் காரணம். சிறந்த இயக்குனர்களால்தான் சிறந்த படங்களைக் கொடுக்க முடியும். 'நான்தான் ஷபானா' படமும், என்னுடைய கதாபாத்திரமும் எனக்கு மிகப் பெரிய பெயரைத் தேடிக் கொடுக்கும்,” என்கிறார் டாப்ஸி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget