நடிகை ரவீணா டன்டாண், தனது அடுத்த படமான மாதிர் படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் ஏப்ரல் 21ம் தேதி
ரிலீசாக உள்ளது. ஸ்ரீதேவி நடித்த மாம் படம் ஏப்ரல் 14 அன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ரவீணா கலந்து கொண்டார். அப்போது, ரவீணா நடித்த மாதிர் படத்தையும், ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தையும் ஒப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய ரவீணா, ஸ்ரீதேவி ஒரு சீனியர் நடிகை. அவரை மிகவும் மதிக்கிறேன். நான் எப்போதுமே அவருடைய மிகப் பெரிய ரசிகை. பிங்க், மாம், மாதிர் என எந்த படமாக இருக்கட்டும். ஆனால் அத்தகைய படங்கள் இன்று சினிமாவில் அதிகம் எடுக்கப்படுவதில் நான் பெருமை கொள்கிறேன். இது போன்ற இன்னும் நிறைய படங்கள் வரும் என நம்புகிறேன். அதனால் இதில் ஒப்பீடுகள் வேண்டாம். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது இது போன்ற தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.

கருத்துரையிடுக