கேழ்வரகு கூழ் செய்வது எப்படி

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு கூழ் செய்வது எப்படி என்று
பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1 கப்
தண்ணீர் - 3 + 1 கப்
உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். 

* 1 கப் தண்ணீரில் கேழ்வரகு மாவை கட்டியில்லாமல் கரைக்கவும்.

* அடுப்பின் தணலை குறைத்து கரைத்த கேழ்வரகு மாவை கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கட்டிதட்டாமல் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். 

* நன்கு கெட்டியாக வந்தபின் இறக்கவும். 

* சூப்பரான கேழ்வரகு கூழ் ரெடி.

* ஆறியபின் தயிர் கலந்து மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். 

* வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான உணவும் கூட.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget