ஒரு கனவு போல என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பார்த்து விட்டார்கள். நல்ல கதையம்சம் கொண்ட
இந்தப் படத்தில் நடித்திருக்கும் அமலா ரோஸ்குரியன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது. தனது அறிமுகம் குறித்து அமலா ரோஸ்குரியன் கூறியதாவது:
கேரளாவில் உள்ள கோட்டையம் எனது சொந்த ஊர். குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளேன். பின்னர் விளம்பரப் படத்தில் நடித்தேன். துல்கர் சல்மான நடித்த தீவிரம் படத்தில் வில்லன் அனுமோகன் மனைவியாக நடித்தேன். அதன் மூலம் தமிழ் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது என்னை வைத்து விளம்பர படம் எடுத்த ஒளிப்பதிவாளர் அழகப்பன் மூலமாக ஒரு கனவு போல படத்தின் வாய்ப்பு கிடைத்தது. இதில் ராமகிருஷ்ணன் மனனவியாக நடித்திருக்கிறேன். ஒரு விநாடி சபலத்துக்கு ஆளான ஒரு குடும்ப பெண்ணின் கேரக்டர்.
படம் பார்த்த எல்லோரும் மனதார பாராட்டினார்கள், பூர்ணிமா மேடம், பிரியாமணி மேடம், சித்தாரா மேடம் மாதிரி இருப்பதாக சொன்னார்கள். சந்தோஷமாக இருந்தது. படம் விரைவில் வெளிவந்து மக்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். என்கிறார் அமலா ரோஸ்குரியன்.

கருத்துரையிடுக