சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'விவேகம்'.
இப்படத்தின் முதல் பார்வை பிப்ரவரி 2ம் தேதியன்று டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்டது. அஜித்தின் சிக்ஸ்பேக் தோற்றத்துடன் இருந்த அந்த முதல் பார்வை வைரலாகப் பரவியது. அஜித்தின் சிக்ஸ்பேக் தோற்றம் குறித்தும் பல சந்தேகங்கள், விமர்சனங்கள் எழுந்தன.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நாளிலிருந்து அடுத்தடுத்த படப்பிடிப்புகள் பல்கேரியா நாட்டில் மட்டுமே அதிகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மிக மிகக் குறைவான நாட்களே படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.
சிவா - அஜித் கூட்டணியில் வெளிவரும் இந்தப் படம் அவர்களுடைய முந்தைய கூட்டணியான 'வேதாளம், வீரம்' ஆகிய படங்களை விட வேறு ஒரு தளத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பல்கேரிய நாட்டில் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் 19ம் தேதியுடன் அங்கு படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் நாடு திரும்ப உள்ளார்கள்.
அதன் பின் மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளன்று 'விவேகம்' படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.

கருத்துரையிடுக