புதினா சட்னி செய்வது எப்படி

புதினா மருத்துவ குணங்கள் நிறைந்த இலையாகும். செரிமானத்திற்கு மிகவும் உகந்தது. புதினா இலைகள் சட்னி, குழம்பு, சாலட், சூப், பச்சடி மற்றும் டீ தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது.அத்தகு
புதினாவைப் பயன்படுத்தி சுவையான சட்னி தயாரிப்பதற்கான செய்முறை குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.

 தேவையான பொருட்கள்

புதினா இலைகள்  – 2 கையளவு
மல்லித்தழை – 1/2 கையளவு
கறிவேப்பிலை – 10 இலைகள்
சின்ன வெங்காயம் – 4
உளுத்தம்பருப்பு – 1 1 /2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 – 3
தேங்காய் துருவியது – 2 தேக்கரண்டி
புளி – சிறு நெல்லிக்காயளவு

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

இதனுடன் புதினா, மல்லித்தழை சேர்த்து இலைகள் சுருங்கும் வரை வதக்கிக் கொள்ளவும்.

இறுதியாக தேங்காய்த் துருவல் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
சூடு ஆறியதும் புளி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
புதினா சட்னி சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget