பாசிப்பருப்பு பாயாசம் செய்வது எப்படி

தமிழ் புத்தாண்டு தினமான இன்று (14.4.17) இனிப்பான, இனிய நாளாக தொடங்க பாசிப்பருப்பு பாயாசம் செய்து வீட்டில் உள்ளவர்களை
அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு - 1 கப்
பச்சரிசி மாவு - 2 ஸ்பூன்
வெல்லம் - 1 கப் (துருவியது)
நெய் - 1/4 கப்
முந்திரி - 10
உலந்த திராட்சை - 10
ஏலக்காய் - 3 (நசுக்கியது)
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்

செய்முறை:

* பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்த பின் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். (பாசிப்பருப்பு வேகும் வரை தேவையான அளவு தண்ணீர் சேர்க்கலாம்). வெந்த பருப்பை நன்கு மசித்து விடவும்.

* நன்றாக வெந்தபின் பச்சரிசி மாவு தண்ணீர் விட்டு கலக்கி பருப்பு கலவையில் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும்.

* வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும்.

* வெல்லம் கரைந்ததும் எடுத்து வேக வைத்த பருப்பில் வடிகட்டி ஊற்றவும்.

* பருப்புடன் ஏலக்காய், வெல்லத்தை சேர்த்ததும் நன்கு கிளறி விட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும்.

* மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து பருப்பு கலவையில் கொட்டவும்.

* தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறலாம்.

* சுவையான சித்திரை ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget