அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி

என்னென்ன தேவை?

அரிசி - 1 கப்
துவரம் பருப்பு- 1/4 கப்
சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 2
பூண்டு - 2 முதல் 3
தண்ணீர் - 3 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சாம்பார் தூள் - ஒரு சிறிய சிட்டிகை (விரும்பினால்)
கொத்தமல்லி இலை - 1 டீஸ்பூன்
நெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 3/4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

எப்படிச் செய்வது?

அரிசி மற்றும் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கர் ஒன்றில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொறிந்த பின் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். தக்காளி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், சாம்பார் தூள் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி பின்னர் ஊற வைத்த அரிசியை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து (1 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர்) மூடி வேக விடவும். 3 விசில் வந்த பின் அடுப்பை அணைத்து சிறிது நெய் ஊற்றி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறினால் அரிசி பருப்பு சாதம் தயார்!!!

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget