தந்தூரி சிக்கன் செய்வது எப்படி

தேவையானவை:

சிக்கன் தொடை மற்றும் நெஞ்சு பகுதி - 350 கிராம்,
ஹங்க் தயிர் - 100 கிராம்,
பூண்டு - 5 பல்,
இஞ்சி - 1 இன்ச் துண்டு,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
கருப்பு உப்பு - தேவைக்கு,

கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
வெந்தய தூள் - 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
கடுகு எண்ணெய் - 10 மி.லி.,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

சிக்கனை நன்கு கழுவி ஈரம் இல்லாமல் எடுத்துக் கொண்டு  உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிருடன் மீதியுள்ள மற்ற பொருட்களை சேர்த்து கலக்கவும். இதனை சிக்கனில் சேர்த்து நன்கு மேரினேட் செய்து ஃபிரிட்ஜில் ஏழு மணி நேரம் வைத்து தந்தூரி தவாவில் சுட்டு எடுத்து பச்சை சட்னியுடன் பரிமாறவும்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget