கமகமக்கும் மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா

மட்டன் - ஒரு கிலோ.
வெங்காயம் - 1/2 கிலோ.
தக்காளி - 200 கிராம்.
இஞ்சி, பூண்டு விழுது - 150 கிராம்.

பச்சை மிளகாய் - 4.
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி.
தயிர் - 200 மி.லி.
பட்டை - 1 துண்டு.
கிராம்பு - 4.
ஏலக்காய் - 2.
கொத்தமல்லித் தழை - சிறிதளவு.
புதினா - 4 (சிறிதளவு).
எலுமிச்சை - 1.
கடலை எண்ணெய் - 1/4 லிட்டர்.
அரிசி (ஜீரகச் சம்பா) - ஒரு கிலோ.
உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளியை தனியாக விழுதுபோல அரைத்துக் கொள்ளவும். அதேபோல இஞ்சி பூண்டையும் தனியாக. அரிசியை நன்றாக அலசி அரை  மணி நேரம் ஊற வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானவுடன், பொடியாக அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுத்து விழுதாக உள்ள  வெங்காயம் தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மிளகாய்த் தூள் சேர்த்து 5 நிமிடம் கலக்கவும். தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா,  தேவையான அளவு உப்பு ஆகியவற்றை கலக்கவும். பிறகு பெரிய பாத்திரத்தில் உப்பு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் ஊற வைத்த அரிசியை  சேர்த்து, கூடவே சிறிதளவு எலுமிச்சைச் சாறு விட்டு, 70 சதவிகிதம் வேக வைத்து எடுக்கவும்.

எலுமிச்சைச் சாறு விடுவதால் அரிசி உடையாது. தனியாக ஒரு பாத்திரத்தில் கறியுடன் சிறிதளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேக வைத்து இறக்கவும்.  மசாலா ருசியை சரிபார்த்து, மிதமான தீயில் வேகவைத்த கறியைச் சேர்த்து எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, வடித்த சாதத்தைச் சேர்த்து, அடுப்பில்  தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், பாத்திரத்தின் ஓரத்தில் ஈரத்துணியைத் தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி,  அதன் மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை ஆவி போகாமல் சுமார் 20 நிமிடம் மூடி வைக்கவும். இறுதியாக நெய் சேர்த்து கிளறவும்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget