தேங்காய் இடியாப்பம் செய்வது எப்படி

இடியாப்ப மாவு - 2 கப்,
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய தேங்காய் - 1 கப்,
கடுகு - 1 டீஸ்பூன்,

நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1  கொத்து,
உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும். இடியாப்ப மாவினை அதில் கொட்டிக் கிளறி இடியாப்ப நாழியில் போட்டு இடியாப்பமாக பிழிந்து இட்லித் தட்டில் ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து, பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் போட்டு வறுத்து, உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து ஒரு முறை புரட்டி சூடாக பரிமாறவும்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget