ரிலையன்ஸ் ஜியோவின் ஐபிஎல் 2021 மெகா சலுகைகள்

ஐபிஎல் 2021 கிரிகெட் தொடர் (ஏப்ரல் 9) துவங்குகிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு ஐபிஎல் சார்ந்த சிறப்பு சலுகைகளை


அறிவித்து இருக்கிறது. ஜியோபோன் பயனர்களுக்கு பிரத்யேகமாக ஜியோ கிரிகெட் செயலி இலவசமாக வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கோர் அப்டேட்கள், போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ. 401 விலையில் துவங்கி ரூ. 2599 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் விலை உயர்ந்த சலுகை ஒரு வருடத்திற்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. இவை அனைத்திற்கும் இலவச வருடாந்திர டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி  சந்தா வழங்கப்படுகிறது.

ரூ. 401 சலுகையில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 598 சலுகையில் 56 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

ரூ. 777 சலுகை 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, கூடுதலாக 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. ரூ. 2599 சலுகையில் 365 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், கூடுதலாக 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget