சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் இந்திய  சந்தையில் புதிய கேலக்ஸி எம் மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பட்டியலில் கேலக்ஸி எம்42 5ஜி மாடலும் ஒன்று.  சமீபத்தில் கேலக்ஸி எம்42 5ஜி மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய 5ஜி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம்  செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எம்42 5ஜி மாடலில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி யு வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ, புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 20 எம்பி செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget