எம்.டி.எஸ். என்ற பெயரில், தேசிய அளவில், தொலை தொடர்பு சேவைகளை மேற்கொண்டு வரும் சிஸ்டமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் நிறுவனம்,
அண்மையில் MTS MBlaze Power Wi-Fi என்ற ரெளட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5,200 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு உங்கள் மொபைல் சாதனங்களை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் ஆறு சாதனங்களுக்கு வை பி வசதி தரலாம். டேட்டா பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. வை பி இணைப்பு மூலம் பைல்களை மாற்றிக் கொள்ளலாம். இது எம்.டி.எஸ். 3ஜி ப்ளஸ் நெட்வொர்க்கில் செயல்படுகிறது. ப்ரீ பெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் பயனாளர்கள் ஆகிய இருவருக்கும் இது கிடைக்கிறது.
இதன் தொழில் நுட்ப அம்சங்கள்: பி.சி.எம். 43362 வை பி சிப்செட், குவால்காம் 6600, EVDO Rev 8 சி.டி.எம்.ஏ சிப்செட், ஒரே நேரத்தில் 6 சாதனங்களுக்கு வை பி இணைப்பு தரும் திறன், தொடர்பிற்கான சிக்னல்களைச் செறிவுடன் தர இரண்டு ஆன்டென்னா, யு.எஸ்.பி. 2., 32 ஜிபி எஸ்.டி. கார்ட் பயன்படுத்த வசதி, வைபி இணைப்பு நிலை, சார்ஜிங் பணி, பேட்டரி லெவல் ஆகியவற்றைத் தெரிவிக்கும் எல்.இ.டி. தகவல் விளக்குகள் மற்றும் தொடர்ந்து 15 மணி நேரம் வை பி பயன்பாடு தரும் 5200 mAh திறன் கொண்ட பேட்டரி.
ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பயன்படுத்துபவர்கள், தொடர்ந்த இணைய இணைப்பினையும், இதற்கான மின் சக்தி தரும் பேட்டரியையும் எதிர்பார்க்கின்றனர்.எனவே தான் அந்த எதிர்பார்ப்புகளை ஈடு செய்திடும் வகையில், இந்த எம் பிளேஸ் பவர் வைபி (MTS MBlaze Power Wi-Fi) சாதனம் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுவதாக, சிஸ்டமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்த சாதனத்தை ப்ரீ பெய்ட் பயனாளர்கள், ரூ.3,499 திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் 10 ஜி.பி. டேட்டா பயன்பாடு, 30 நாள் காலக் கணக்கில் வழங்கப்படுகிறது. கூடுதலாக யு ட்யூப் பயன்பாட்டிற்கு மட்டும் என 5 ஜிபி தரப்படுகிறது. போஸ்ட் பெய்ட் பயனாளர்களுக்கு ரூ.2,999 கட்டணத்தில் பல வகைத் திட்டங்களின் கீழ் தரப்படுகிறது.

கருத்துரையிடுக