பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கொலைகள், கற்பழிப்புகள்
மற்றும் ஜாடை மாடையாக கேலிசெய்வது போன்ற தொந்தரவுகள், ரெயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, குறிப்பாக தனியாக பயணிக்கும்போது, சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன.
இது போன்ற சூழல்களில், பெண்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனத்தோடும் விழிப்புணர்வோடும் பயணிப்பது மிக முக்கியம். நீங்கள் அரட்டை அடிப்பதில் ஆர்வம் உள்ளவராய் இருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லை.
ஆனால், தனியாகச் செல்லும் போது, அவ்வாறான அரட்டைகளை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரையில், யாரோடும் தேவையில்லாத உரையாடல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மேலும் பயணிப்போர் யாரேனும், உரையாடல்களில் கலந்து கொள்ளும்படி நச்சரித்தால், குறைந்த அளவில் உரையாடல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக தனிப்பட்ட தகவல்கள் எதையும் பகிர்ந்து கொள்ள கூடாது. ரெயில் அல்லது பேருந்தின் ஓரத்தில், ஒரு ஆணின் பக்கத்தில் தனியாக இருப்பதாக உணரும் பட்சத்தில், பெண்கள் அதிகம் உள்ள பகுதிக்கு உடனே செல்ல வேண்டும்.
அருகில் அமர்ந்திருக்கும் நபரினால் தர்ம சங்கடமாக உணர்ந்தால், இருக்கையை மாற்றித் தரக்கோரலாம் அல்லது சக பயணிகளிடம் பேசி, அவர்களை உங்கள் இருக்கையில் அமர்த்தி, அவர்களின் இருக்கையில் நீங்கள் சென்று அமரலாம்.

கருத்துரையிடுக