லட்டு தின்ன ஆசையுடன் விசாகா சிங்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெற்றி பெற்றபோதும், விசாகா சிங்கிற்கு தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லை. மீண்டும்
அப்படத்தில் நடித்த சேது-சந்தானம் இணைந்துள்ள வாலிபராஜா படத்தில் நடித்து வந்தார். அதையடுத்து, விமல்-ப்ரியாஆனந்த் நடித்திருக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திலும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார்.

இதில் வாலிபராஜா படத்தில் சேதுவுடன் சந்தானமும் நடித்திருந்தபோதும் படம் திரைக்கு வருவது தாமதமாகிக்கொண்டே வருகிறது. அதனால் அந்த படத்தை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்துள்ள விசாகாசிங்கிற்கு ஆறுதலாக இப்போது விமலுடன் அவர் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. 

இந்த படத்தில் ப்ரியாஆனந்தும் ஒரு கதாநாயகி என்றபோதும், தனக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ளதால் இந்த படமாவது தனக்கு கோலிவுட்டில் ஒரு நிலையான இடத்தை பிடித்துத்தருமா? என்று எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார் விசாகாசிங். மேலும் இப்படத்தில் நினைத்தேன் வந்தாய் படத்தில் ரம்பா-தேவயானி இருவரும் இணைந்து ஒரு பாடலில் நடனமாடியது போன்று, ப்ரியாஆனந்த்-விசாகாசிங் இருவரும் ஒரு பாடலில் நடனமாடியிருக்கிறார்களாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget