கூந்தல் உதிர்வை தடுக்க என்ன செய்யலாம்

இன்றைய தலைமுறையினர் பலர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையை சந்திக்கின்றனர். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில்
சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமின்றி, மன அழுத்த மிகுந்த வாழ்க்கையும் முக்கியமானதாகும். 

அதுமட்டுமின்றி, தற்போதைய அவசர காலத்தில் முடியை பராமரிக்க பலருக்கு நேரம் இல்லை. அப்படி நேரம் இருந்தாலும், சரியான உணவுகளை உட்கொள்ளாததால், முடியின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. கீழே கூறப்பட்டுள்ள உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும். 

முடி உதிர்வதைத் தடுப்பதிலும், முடியின் வளர்ச்சியை தூண்டுவதிலும் பாதாமை விட மிகவும் சிறப்பான உணவுப்பொருள் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் பாதாமில் முடி வெடிப்பை தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. 

அதுமட்டுமின்றி, இரும்புச்சத்து, புரோட்டீன் போன்றவையும் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுத்து வந்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதுடன், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். கோதுமை உணவுகளும் முடி கொட்டுவதைத் தடுக்கும். 

அதற்கு கோதுமை சப்பாத்தியோ அல்லது கோதுமை பிரட்டோ அன்றாடம் சாப்பிட்டு வாருங்கள். இதனால் நிச்சயம் முடி உதிர்வதைத் தடுக்கலாம். சோயா பீன்ஸில் வைட்டமின் ஈ மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வதைத் தடுக்கும். 

மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதேப்போல் வைட்டமின் ஈ முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். முடியை வலிமையாக்க முட்டை மற்றும் பால் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். 

ஆகவே அன்றாடம் இதனை உட்கொண்டு வந்தால், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி உதிர்வது தடுக்கப்படும். உலர் திராட்சையை பலர் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுபவர்களைப் பார்த்தால், அவர்களுக்கு முடி கொட்டவே கொட்டாது. 

ஏனெனில் உலர் திராட்சையில் இரும்பிச்சத்து அதிகம் இருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இதனால் உடலில் தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருந்து, ஸ்கால்ப்பில் மயிர்கால்கள் வலிமையோடு இருக்க வழி செய்யும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget