வருங்கால மனைவியை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா

பெற்றோர்கள் அவர்களது பிள்ளைக்கு ஏற்ற துணையை தேடுகின்றனர். பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணம் ஒரு லாட்டரி
சீட்டு போன்றது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உங்களது துணைவர் நீங்கள் எதிர்பார்த்தபடி இருப்பார்கள். 

ஒருவேளை உங்களுக்கு லக் இல்லாமல் போனால் நீங்கள் ஒருவருக்கொருவர் வாழ்நாள் முழுவதும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டியதாக இருக்கும். இப்படிப்பட்ட திருமண பந்தத்தில் உங்களுடைய வருங்கால துணைவியின் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்வது ஒரு பெரிய சவாலாக தான் இருக்கும். 

பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கும் பெண்ணை பற்றிய ரகசியங்களை அறிந்து கொள்ள ஒரு சிறந்த வழி நண்பர்கள். நண்பர்கள் உங்கள் துணைவியின் குணாதிசயங்களை நன்கு அறிவார்கள். 

உங்கள் துணைவருக்கு பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம், கல்லூரி ரகசியங்கள் மற்றும் அவர்களின் மறக்க முடியாத நினைவுகள், அடிக்கடி செல்லும் இடங்கள, பழைய உறவுகள் மற்றும் உங்கள் துணைவி விரும்பியவர்களின் பட்டியல் ஆகியவற்றை நண்பர்கள் மூலம் அறியலாம். 

பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்கள் நமக்கு தேவையானவர்களை பற்றி அறிந்து கொள்ள சாதகமாக இருக்கின்றன. உங்கள் துணைவியின் கணக்கைத் தேடி கண்டுபிடித்து அவரது புகைப்படம், நண்பர்கள், மற்றும் இதர கருத்துக்களை நாம் காண முடியும். 

இதன் மூலம் அவர் எத்தகைய குணம் உடையவர் என்பதையும் அறிய முடியும். அது மட்டுமில்லாமல் அவருக்கு பிடித்த பாடல்கள், சமீப காலத்தில் பார்த்த படங்கள், படிப்பு தகுதி போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். அவர் எழுதும் ஸ்டேட்டஸ் மற்றும் அவரது கருத்துக்களை அதில் பதிவு செய்யும் போதும் அதை கண்டு ஒரு தோராயமாக அந்த நபர் எப்படிபட்டவர் தெரிந்து கொள்ள முடியும். 

உங்களது துணைவியின் நல்ல குணங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் மாமியாரிடம் பேச வேண்டும். அவருக்கும் பிடித்த உணவு, தினசரி தேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget