அஞ்சலியின் சில்க் அவதாரம்

அஞ்சலி கவர்ச்சிக்கு மாறி உள்ளார். சூர்யாவின் ‘சிங்கம்.2’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார். தற்போது ‘கீதாஞ்சலி’ என்ற
தெலுங்கு படத்தில் தாராள ஆடை குறைப்பு செய்து நடித்து வருகிறார். ஜெயம் ரவியுடன் பெயரிடப்பட்டாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதிலும் கவர்ச்சி இருக்கும் என்கின்றனர். 

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை படமாக்க முயற்சிகள் நடக்கிறது. இதில் ஷகிலா வேடத்தில் அஞ்சலி நடிக்கப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. அஞ்சலி கவர்ச்சியாக தோன்றுவதால் ஷகிலா கேரக்டருக்கு அவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அஞ்சலி தான் அடுத்த சில்க்ஸ்மிதா என தெலுங்கு டைரக்டர் பரபரப்பாக பேசி உள்ளார். 

ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் அஞ்சலி கலந்து கொண்டார். அவ்விழாவில் பிரபல இயக்குனர் ஒருவர் பங்கேற்று பேசும்போது, ‘‘அஞ்சலி மறைந்த நடிகை சில்க்ஸ்மிதாவை போல் கவர்ச்சியாக இருக்கிறார். சிங்கம்–2 படத்தில் அஞ்சலி ஆடிய குத்தாட்டம் பிரமாதமாக இருந்தது. அஞ்சலி மட்டும் குத்தாட்ட நடிகையாக மாறினால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்’’ என்றார். 

இதை கேட்டதும் கூட்டத்தினர் கைதட்டினர். ஆனால் அஞ்சலிக்கு அந்த பேச்சு பிடிக்கவில்லை. சில்க்ஸ்மிதாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசியது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கோபத்தோடு அவ்விழாவில் இருந்து வெளியேறி விட்டாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget