அக்காவை தோழியாக்கிய தனிஷா

பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி கஜோல், இவரது தங்கை தான் தனிஷா. தமிழில் உன்னாலே உன்னாலே படத்தில் நடித்தவர். அதன்பின் தமிழில்
படங்கள் இல்லை, இதனால் இந்தி படங்களில் நடித்தவர், தற்போது டிவி தொடர்களில் நடித்து வருகிறார். சிறு வயது முதலே தனது சகோதரி கஜோல் தான், தன்னுடைய நெருங்கிய தோழி என்று இப்போதும் கூறுகிறார்.

இதுகுறித்து தனிஷா கூறியிருப்பதாவது, எனக்கு 11வயது இருக்கும் போது முதன்முதலாக கஜோல் உடன் நண்பர்கள் தினத்தை கொண்டாடினேன், என்னிடம் இருந்த பாக்கெட் மணியை வைத்து நண்பர்கள் பேண்டு வாங்கி, அதை அவளுக்கு அணிவித்தேன். கஜோல் எப்போதும் என் மீது அளவு கடந்த பாசமாக இருப்பார், எங்களுக்குள் எந்த ஒளிவுமறைவும் கிடையாது, இருவரும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வோம். மேலும் என்னை எப்போதும் ரொம்பவே பாதுகாப்பாக கவனித்து வருவார். எனக்கு எட்டு வயது இருக்கும்போது, ஒருசமயம் எங்கள் வீட்டு திருமணத்திற்கு முதல்நாள் எனக்கு மிகவும் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது, அன்றைய இரவு முழுக்க கஜோல் தான் இரவு முழுக்க தூங்காமல் என்னை கவனித்து வந்தார். கஜோலை விட நெருங்கிய நண்பர் யாரும் கிடையாது, நெருங்கிய நண்பர் என்ற வார்த்தையை கேட்டாலே அவரது ஞாபகம் தான் வரும் என்று அக்கா சாரி தோழி புராணம் பாடுகிறார் தனிஷா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget