கணவரின் கனவை நனவாக்கும் டிஸ்கோ சாந்தி

தொண்ணூறுகளில் கவர்ச்சி நடிகையாய் கொடி கட்டிப்பறந்தவர் டிஸ்கோ சாந்தி. விஜயபுரி வீரன் என்று அழைக்கப்பட்ட சி.எல்.ஆனந்தனின் மூத்த
மகளான டிஸ்கோ சாந்தி, ஸ்ரீஹரி என்ற தெலுங்குப்பட வில்லன் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த ஸ்ரீஹரி பின்னாட்களில் வில்லன் வேடங்களில் நடிக்கத்தொடங்கினார். பிறகு ஹீரோவாக உயர்ந்தார். ரியல் ஸ்டார் என்று அவரை ஆந்திர ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

மேலும் உச்சத்தை அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீஹரி, கடந்த அக்டோபர் மாதம் திடீரென் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு கடும் அதிர்ச்சியடைந்த டிஸ்கோ சாந்தி, ஆறு மாதங்களாக வீட்டைவிட்டு வெளியேவராமலே இருந்தார். தற்போது ஓரளவுக்கு தேறிவருகிறார் டிஸ்கோ சாந்தி. அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்.

மூத்த பையன் ப்ளஸ் டூ படித்து வருகிறார். இரண்டாவது மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இரு பிள்ளைகளில் ஒரு பையனை ஹீரோவக்க திட்டமிட்டு அதற்கான பயிற்சிகளை கொடுத்து வருகிறார். இன்னொரு பையனை டைரக்டராக்க வேண்டும் என்பது ஸ்ரீஹரியின் விருப்பமாம். மறைந்த கணவரின் ஆசைப்படி தன் இளைய மகனை இயக்குநராக்கும் திட்டத்தில் இருக்கிறார் டிஸ்கோ சாந்தி. அவரது இளைய மகன் இப்போதே குறும்படங்களை எடுத்து வருகிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget