குத்துப்பாட்டு அலர்ஜியில் நீது சந்திரா

சமீபகாலமாக ஸ்ருதிஹாசன், தமன்னா போன்ற முன்னணி ஹீரோயினிகளே தங்களது அபிமானிகள் அழைத்தால் குத்துப்பாட்டுக்கு ஆடி
வருகிறார்கள். ஆனால், மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நீது சந்திராவை யாராவது ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்று சொன்னால், தெறித்து ஓடுகிறாராம்.

தமிழில் தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன் படங்களில நாயகியாக நடித்த நீது சந்திரா, யுத்தம் செய் படத்தில் கன்னித்தீவு பெண்ணா கட்டெறும்பு கண்ணா என்ற பாடலுக்கு டைரக்டர் அமீருடன் இணைந்து நடனமாடியிருந்தார். அதையடுத்து சேட்டை படத்திலும் லைலா லைலா என்ற ஒரு பாடலில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார்.

அதனால் இப்போதும் கோலிவுட்டில் இருந்து அவரை குத்தாட்டம் ஆட அழைப்புகள் சென்றவண்ணம் உள்ளன. ஆனால், நீதுசந்திராவுக்கு ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றாலே இப்போது அலர்ஜியாகி விட்டதாம். கதாநாயகி வாய்ப்பு தருவதாக சொல்லி என்னை ஆட அழைத்தபோதுதான் அதற்கு சம்மதித்தேன். ஆனால் அவர்களெல்லாமே ஏமாற்றி விட்டனர்.

அதையடுத்து என்னை கண்டுகொள்ளவே இல்லை. அதனால் இப்போது நானும் குத்துப்பாட்டில் இருந்து விலகி விட்டேன். சில முன்னணி ஹீரோயினிகளைப்போன்று கதாநாயகி வாய்ப்புகளும் கிடைத்து, இடையிடையே குத்துப்பாட்டுக்கு ஆடினால் பிரச்சினை இல்லை.ஆனால் வெறும் குத்துப்பாட்டுக்கு மட்டுமே ஆடுவதில் எனக்கு விருப்பம இல்லை. அதனால்தான், பல அழைப்புகள் வந்தும் தவிர்த்து விட்டு கதாநாயகி வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன் என்கிறார் நீதுசந்திரா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget