சின்ன திரையில் கலக்க வரும் அமலா

1980களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை அமலா. டி.ராஜேந்தரின் மைதிலி என்னை காதலி படத்தில் அறிமுகமான அமலா
அதன்பிறகு கமல், ரஜினி, கார்த்திக், பிரபு, என அன்றிருந்த அத்தனை ஹீரோக்களுடனும் நடித்தார். தெலுங்கு படங்களில் நடித்தபோது நாகார்ஜூனாவை காதலித்து 1992ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவை விட்டு முற்றிலும் ஒதுங்கினார். புளூகிராஸ் அமைப்பில் இணைந்து பிராணிகள் நலனுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். தற்போது அவர் மகன் அகில் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

அமலா சினிமாவில் இருந்து விலகினாலும் அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. அதனை அவர் தீவிரமாக மறுத்து வந்தார். தற்போது யாரும் எதிர்பாராத வகையில் உயிர்மெய் என்ற தமிழ் சீரியலில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதில் அமலா டாக்டராக நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. ஐதராபாத்திலிருந்து பறந்து வந்து நடித்து கொடுத்து விட்டு வந்த வேகத்தில் திரும்பி விடுகிறார்.

தான் உயிர்மெய் சீரியலில் நடிப்பது ஏன் என்பதற்கு அமலா கொடுத்துள்ள விளக்கம் இது: திருமணத்துக்கு பிறகு நடிக்கிற எந்த ஐடியாவும் என்கிட்ட இல்ல. இனி சினிமா வேண்டாம்.

நல்ல அம்மா, நல்ல மனையியாக வாழ்ந்தால் போதும் புளூகிராஸ் மூலம் முடிந்ததை செய்தால் போதும் என்று இருந்தேன். சமீபத்தில் சேகர்காமுலா வற்புறுத்திக் கேட்டதால் லைஃப் இஸ் பியூட்டிபுல் படத்தில் மட்டும் நடித்தேன். உயிர்மெய் சீரியல் தயாரிப்பாளர் ரமேஷ் என்னை சந்தித்து இது மருத்துவமனை டாக்டர்கள் பற்றிய கதை. அதில் நீங்க நடிச்சா உங்க மூலம் மக்களுக்கு சில மேசேஜ்களை சொல்ல முடியும். நீங்க சொன்னா மக்கள் நம்புவாங்கன்னு சொன்னார். சீரியல்ல இருந்து சமூக அக்கறையும் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்கிறார் அமலா.

உயிர்மெய் தொடர் வருகிற 18ந் தேதி முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இனி திங்கள் முதல் வெள்ளி வரை நம் வீட்டுக்குள் வருகிறார் டாக்டர் அமலா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget