இந்திப்பட உலகின் ராஜா ஷாருக்தான்

நடிகர் சல்மான்கான் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள 'கிக்' இந்தித் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகியுள்ளது. இந்தித் திரையுலகின்
மற்றொரு பிரபலமான ஷாருக்கானும், சல்மானும் எப்போதுமே ரசிகர்களால் ஒன்றாகக் கணிக்கப்படுகின்றனர். எனவே 'கிக்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சல்மானே தற்போது முன்னணியில் இருப்பதான ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. 

அதற்கு பதிலளித்த சல்மான் ஏற்கனவே அங்கு ஒரு ராஜா இருக்கின்றார், அவரே அந்தப் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஷாருக் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் சல்மான் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி பின்னாளில் தன்னை முதல் இடத்தில் வைத்துக்கொள்ள முடியும் என்றும் தற்போது இது தனக்கு தவறான இடமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget