லட்சுமிமேனனை பிடித்த நாயகன் சிம்பு

தற்போதைய சினிமா நடிகைகளில் சிம்பு ஓப்பனாக பேசக்கூடியவர். எனக்கும் அகம் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசத்தெரியாது. என் மனதில் பட்டதை
அப்படியே வெளியே கொட்டி விடுகிறேன் அதனால்தான் எனக்கு இந்த பீல்டில் ரொம்ப கெட்ட பெயர். ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. நடிப்பதை சினிமாவோடு வைத்துக்கொண்டு, நிஜவாழ்க்கையில் யதார்த்தமான மனிதனாக இருக்கவே விரும்புகிறேன் என்று இப்போது சில மேடைகளில் தன்னைப்பற்றி ஓப்பன் ஸ்டேட்மெண்டு விடுகிறார் சிம்பு.

அதனால்தானோ என்னவோ சிம்புவின் ஓப்பன் ஹார்ட் நடிகைகளுக்கு ரொம்ப பிடித்து விடுகிறது. அதனால்தான் ஒரே படத்தில் நடித்து சிம்புவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. அதையடுத்து வேகமாக அவர்கள் பிரிந்தும் விட்டனர். அதையடுத்து ஹன்சிகாவும் சிம்புவை காதலித்தார். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலைப்பற்றி பலரும் சொன்னபோதும், எதைப்பற்றியும் கவலையில்லை. சிம்பு நேர்மையானவர், ஒழுக்கமானவர் அந்த குணம் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி அவரை காதலித்தார். ஆனால் அவரும் சில மாதங்களிலேயே சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்டார்.

இந்த நிலையில், தமிழுக்கு வந்து விக்ரம்பிரபு, சசிகுமார், விஷால், விமல், சித்தார்த் என பல நடிகர்களுடன் நடித்து விட்ட லட்சுமிமேனனும், தமிழில் தனக்கு பிடித்த நடிகராக சிம்புவைத்தான் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களிடம் இருந்து அவர் வித்தியாசமானவர். அவர் பழகும் விதம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று சிம்பு புராணம் பாடிக்கொண்டு திரிகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget