தல படத்தின் நாயகியாகும் த்ரிஷா - அனுஷ்கா

இதுவரை சினிமாவில் பெரும்பாலும் சிங்கிள் ஹீரோயின் கதைகளிலேயே அதிகமாக நடித்திருக்கிறார் த்ரிஷா. அப்படியே சில
படங்களில் மற்ற நடிகைகளுடன் நடித்திருந்தாலும் அதில் இவர்தான் முக்கிய நாயகியாக இருந்திருக்கிறார்.

அதேபோல் அனுஷ்காவும் தெய்வத்திருமகள் உள்ளிட்ட சில படங்களில் மற்ற நடிகைகளுடன் சேர்ந்து நடித்தபோதும், அவருக்கே முக்கிய நாயகி வேடங்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன.

இந்தநிலையில், தற்போது அஜீத்தின் 55வது படத்தில் இவர்கள் இருவருமே இணைந்துள்ளனர். அப்படியென்றால் யாருக்கு கதையில் முக்கியத்துவம் என்று கேட்டால், இரண்டு பேருக்குமே சரிசமமான வேடங்களே கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். புலனாய்வு அதிகாரியாக நடித்திருக்கும் சால்ட் அண்ட் பெப்பர் அஜீத்துக்கு ஜோடி அனுஷ்கா நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு டூயட் உள்ளது.

அதேபோல் இளவட்ட அஜீத்துக்கு ஜோடியாக அதாவது ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷாவுக்கும் ஒரு டூயட் பாடல் உள்ளது. அது மட்டுமின்றி, கதையில் இருவருக்குமே சமபங்கு இருப்பதோடு, காட்சிகள்கூட கிட்டத்தட்ட ஒரே அளவாகத்தான இருக்கும் என்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக, த்ரிஷாவின் கேரக்டர் ப்ளாஷ்பேக்கில் வந்து செல்வதால், அவர்கள் இருவரும் ஒரு காட்சியில்கூட சேர்ந்து நடிக்கவில்லையாம். அதனால் இதுவரை படப்பிடிப்பில்கூட அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதில்லையாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget