வில்லி வேடத்தில் நான் கில்லி ரேகாகுமார்

கன்னட சீரியல்களில் இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் ரேகா குமார். தெய்வமகள் தொடரில் காயத்திரி என்ற வில்லி கேரக்டரில் நடித்து
வருகிறார். "வில்லியாக நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. தொடர்ந்து வில்லியாகத்தான் நடிப்பேன்" என்கிறார் ரேகா குமார். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடிகையாக அறிமுகமானது கன்னட சினிமாவில்தான். 75 படங்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு கன்னட சீரியல்களில் நடித்தேன். அதை பார்த்து விட்டு மலையாள சீரியல்களில் வாய்ப்பு வந்தது. அதை பார்த்து தெய்வதிருமகள் சீரியல் வந்தது. மூன்று மொழிகளிலும் வில்லி கேரக்டர் என்றால் என்னைத்தான் கூப்பிடுகிறார்கள்.

வாழ்க்கையில் பாசிட்டிவாக இருக்கும்போது சீரியலில் நெகட்டிவாக நடிக்கத்தான் பிடிச்சிருக்கு. வெளியில்போகும் அதோ போறா பாரு அவள் தான் காயத்திரி சண்டாளி என்று பெண்கள் திட்டுகிறார்கள். அது என் நடிப்புக்கு கிடைத்த வெற்றி.

பெங்களூர் சொந்த ஊர். மூன்று மொழிகளில் நடிப்பதால் திருவனந்தபுரம், சென்னை, பெங்களூருக்கு பறந்துகொண்டே இருக்கிறேன். தற்போது தமிழில் ராஜா ராஜேந்திரா என்ற படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவில் பவர்புல் வில்லியாக புகழ்பெற வேண்டும் என்கிற ஆசை உள்ளது. என்கிறார் ரேகாகுமார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget