ஏப்ரல் மாத திரை யுத்தம்

2016ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏப்ரல் மாதம் முடிய 73 படங்கள் வெளிவந்துள்ளன. இதில் ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 22 படங்கள் வெளிவந்துள்ளன. ஜனவரி மாதத்தில் 18 படங்களும், பிப்ரவரி மாதத்தில் 16 படங்களும், மார்ச்
மாதத்தில் 17 படங்களும் வெளியாகியிருந்தன.
நான்கு மாதங்களில் மொத்தமாக 73 படங்கள் வெளிவந்துள்ளதால் அடுத்த 8 மாதங்களில் ஓராண்டு முடிய 220க்கும் மேற்பட்ட படங்கள் இந்த ஆண்டில் வெளிவர வாய்ப்புள்ளது.

ஏப்ரல் மாதத்தில் வெளிவந்துள்ள 22 படங்களில் மிகப் பெரிய பட்ஜெட் படமான தெறியும், அதற்கடுத்து வெளிவந்த வெற்றிவேல், மனிதன் ஆகிய மீடியம் பட்ஜெட் படங்களும்தான் சொல்லிக் கொள்ளும்படியான படங்களாக வெளிவந்தன.

இவற்றில் தெறி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பரவலாக லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. வெற்றிவேல், மனிதன் ஆகிய இரண்டு படங்களும் முதலுக்கு மோசமில்லை என்ற விதத்தில் சுமாரான வெற்றிப் படங்களாக அமைந்தன.

மற்ற 18 படங்களும் பலத்த நஷ்டத்தைச் சந்தித்து தயாரித்தவர்களுக்கு பெரிய அடியைக் கொடுத்துள்ளன. எதற்காக இப்படி சராசரியான வெற்றியைக் கூட கொடுக்க முடியாத அளவிற்கு மிகச் சுமாரான படங்களை சம்பந்தப்பட்டவர்கள் தயாரிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

பணம் படைத்த பெரிய தயாரிப்பாளர்களே படத்தை அதிக தியேட்டர்களிலும், லாபத்திற்கும் விற்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது வாராவாரம் பல புதுத் தயாரிப்பாளர்களின் படங்கள் வெளிவந்து திரையுலகத்தைத் திணறடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை என்றால் திரையுகம் சந்திக்கும் பல நூறு கோடி நஷ்டம் தொடர்கதையாகப் போய்விடும்.

ஏப்ரல் 1ம் தேதியேன்று “உயிரே உயிரே, நாரதன், ஹலோ நான் பேய் பேசுறேன், டார்லிங் 2 ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் டார்லிங் 2, ஹலோ நான் பேய் பேசுறேன் ஆகிய படங்களை ஓரளவிற்காவது விளம்பரப்படுத்தினார்கள். அதனால் அந்தப் படங்கள் ஒரு வாரமாவது தாக்குப் பிடித்து ஓடின. மற்ற இரண்டு படங்களும் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டன.

ஏப்ரல் 8ம் தேதி அவன் அவள், டீக்கடை ராஜா, ஜித்தன் 2, கிடாபூசாரி மகுடி, முதல் தகவல் அறிக்கை, ஓய்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தத் தேதியில் வெளிவந்த ஒரு படம் கூட ஒரு காட்சியாவது ஹவுஸ்புல்லாக ஓடாதா என்பதுததான் பேராசையிலும் பேராசையான விஷயம். சில படங்கள் ஒரு நாளிலும், சில படங்கள் ஓரிரு காட்சியிலும் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன.

ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, “தெறி, நிஜமா நிழலா, யோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ள வை” ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் தெறி படம் மட்டுமே சூப்பர் ஹிட்டாக ஓடி வருகிறது.

ஏப்ரல் 15ம் தேதி மாசி வீதி என்ற ஒரே ஒரு படம் மட்டும் வெளியாகியது. இந்தப் படம் எடுத்ததும் தயாரிப்பாளரின் விதிதான் மாறிப் போயிருக்கும்.

ஏப்ரல் 22ம் தேதி “ஒரு நொடியில் பார்வதிபுரம், என்னுள் ஆயிரம், குகன், வெற்றிவேல்” ஆகிய படங்கள் வெளியாகின. 3 கோடி ரூபாய் செலவு செய்து 3 லட்சம் மட்டுமே வசூலித்தது எங்கள் என்னுள் ஆயிரம் படம் என சீனியர் நடிகர் டெல்லி கணேஷ் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து புலம்ப வேண்டிய நிலையில் உள்ளது திரையுலகம்.

ஏப்ரல் 29ம் தேதி களம், கண்டேன் காதல் கொண்டேன், சாலையோரம் மனிதன் என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவந்தது. உதயநிதி ஸ்டாலின் இதற்கு முன் நடித்த படங்களைக் காட்டிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படம் அவருக்கு பெரிய வசூலைக் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நல்ல நடிகர் என்ற பெயரை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.

ஏப்ரல் மாதம் வெளிவந்த 22 படங்களில் 3 படங்களின் வெற்றி மட்டுமே குறிப்பிடும்படி அமைந்தது.

ஏப்ரல் மாதம் வெளிவந்த திரைப்படங்கள்...

ஏப்ரல் 1

உயிரே உயிரே

நாரதன்

ஹலோ நான் பேய் பேசுறேன்

டார்லிங் 2

ஏப்ரல் 8

அவன் அவள்

ஜித்தன் 2

கிடா பூசாரி மகுடி

ஓயே

முதல் தகவல் அறிக்கை

டீக்கடை ராஜா

ஏப்ரல் 14

நிஜமா நிழலா

யோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ள வை

தெறி

ஏப்ரல் 15

மாசி வீதி

ஏப்ரல் 22

ஒரு நொடியில் பார்வதிபுரம்

குகன்

என்னுள் ஆயிரம்

வெற்றிவேல்

ஏப்ரல் 29

களம்

கண்டேன் காதல் கொண்டேன்

சாலையோரம்

மனிதன்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget