கோடம்பாக்கம் கோகிலாவுக்கு கத்தரி வெட்டு

புல்லுக்கட்டு முத்தம்மா படத்தை இயக்கியவர் சி.ஆர்.முத்துப்பாண்டி. மலையாள நடிகை மினுகுரியன் இந்த படத்தில் புல்லுக்கட்டு முத்தம்மாவாக நடித்திருந்தார். அதனால் அதன்பிறகும் கதாநாயகியை மையமாக வைத்து கோடம்பாக்கம் கோகிலா என்றொரு படத்தை
இயக்கியுள்ளார் முத்துப்பாண்டி. சினிமா ஆசையில் கோடம்பாக்கத்துக்கு வரும் ஒரு இளம் பெண் சந்திக்கிற பிரச்சினைதான் இந்த படம்.

இப்படத்தின் அனைத்துகட்ட வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்நிலையில், தணிக்கை சான்று பெறுவதற்காக சமீபத்தில் அப்படம் திரையிடப்பட்டதாம். ஆனால், படத்தில் நிறைய கிளாமர் காட்சிகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய தணிக்கைக்குழு அதிகாரிகள், அவற்றை கத்தரித்து விட்டு வருமாறு கூறினார்களாம். இதையடுத்து அந்த காட்சிகள் கத்தரிக்கப்பட்டு மறுபடியும் இப்போது சென்சார்போர்டு அதிகாரிகள் பார்த்திருக்கிறார்களாம். இருப்பினும், கோடம்பாக்கம் கோகிலாவுக்கு ஏ சான்றிதழ்தான் கிடைக்கும் என்கிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget