பிளஸ் 2 படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் சுஜா. அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் வாய்ப்புகள் குறையவே ஒரு பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்கினார்.
அவ்வப்போது ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தாலும் ஒரு பாட்டுக்குதான் அதிகமாக ஆடினார். தமிழ், கன்னடம், மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் ஒரு பாட்டுக்கு ஆடியவர். இனி ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை. இனி நடித்தால் ஹீரோயின்தான் என்று அறிவித்தார்.
ஒரு வருடம் இடைவெளிவிட்டு உடம்மை ஸ்லிம்மாக்கி பெயரையும் சுஜா வாருணி என்று மாற்றிக்கொண்டு புத்தம் புது நடிகையாக வந்தார். ஆனாலும் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ரூட்டை மாற்றிய சுஜா நல்ல கதைகளாக தேர்வு செய்து குணசித்தர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் வெளியான 'பென்சில்' படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்திருந்தார். அது அவருக்கு நல்ல ரீ எண்ட்ரியை கொடுத்துள்ளது.
தற்போது சுஜா 'வா டீல்', 'சதுரன் 2', 'கிடாரி', படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அதோடு மூன்று மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். குத்தாட்ட நடிகை என்று பெயரை மாற்றி குணசித்தர நடிகையாவதற்குள் பெரிய போராட்டத்தையே நடத்தி முடித்து விட்டார் சுஜாதா என்கிற சுஜா வாருணி.

கருத்துரையிடுக