கோலிவுட் கோட்டையில் பூஜா திவாரியா

செல்வராகவனின் மயக்கம் என்ன படத்தில் நடித்த பூஜா திவாரியாவின் கையில் தற்போது இறைவி, குற்றமும் தண்டனையும், ஆண்டவன் கட்டளை உள்பட அரை டஜன் படங்கள். இந்த படங்களில்
அவர் முக்கிய நாயகியாக நடிக்கவில்லை என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருவதாக சொல்கிறார். அதில் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் தனக்கு வெயிட்டான வேடம் என்கிறார் பூஜா திவாரியா.

அதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்க வில்லை. அதனால் கிடைத்த வேடங்களில் தற்போது நடித்து வருகிறேன். இதில இறைவி படத்தில் அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகியோர் இருந்தபோதும் எனக்கும் முக்கியமான வேடம் கிடைத்துள்ளது. அதனால் வருகிற ஜூன் 3-ந் தேதி வெளியாகும் இந்த படம் எனக்கு நல்லதொரு ரீச்சை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.

மேலும், இந்த இறைவி படத்தில் நடித்தபோது நான் ஒரு புதுமுக நடிகை போன்று டச்சப் பாய்கூட இல்லாமல்தான் சென்றேன். ஆனால், அப்படத்தில் நடித்த விஜயசேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட அனைவருமே தங்களது டச்சப்பாய் மற்றும் உதவியாளர்களை எனக்கும் டச்சப் மற்றும் தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அதனால் இறைவி படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்கிறார் பூஜா திவாரியா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget