தனுஷ் மூவி ரிலீஸ் நிலவரம்

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தங்கமகன். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. தனுசுக்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் நடித்திருந்த அந்த படம் தனுசுக்கு
அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. அதையடுத்து தொடரி, கொடி படங்களில் நடித்து வந்தார். இதில் பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்துள்ள தொடரி சில மாதங்களுக்கு முன்பே இறுதிகட்ட பணிகள் நடந்து முடிந்து விட்ட நிலையில், படத்தை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும என்று நேரம் பார்த்து வந்த பிரபுசாலமன், ஜூன் மாதம் இறுதியில் அந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

மேலும், அந்த படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து வந்த கொடி படமும் கிட்டத் தட்ட ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதனால் இந்த படத்தை ஜூலையில் வெளியிடப்போகிறார்களாம். அதோடு, கெளதம்மேனன் இயக்கத்தில் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வரும் தனுஷ், ஜூன் மாதம் அப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்து விட்டு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க செல்வார் என்கிறார்கள். ஆக, செப்டம்பர் அல்லது அக்டோபரில் அந்த படமும் திரைக்கு வருகிறதாம். அந்த வகையில், இந்த 2016ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் 3 படங்கள் திரைக்கு வருகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget