கர்ப்பத்தின் போது குழந்தையின் இதயத்துடிப்பை அறிய வேண்டுமா

கர்ப்பத்தின் போது குழந்தையின் இதயத்துடிப்பை மிகத் துள்ளியமாக அறியும் மொபைல் ஆப் கண்டுபிடிக்கப்பட்டது. ஜோஷ்வா ஒக்கேலோ என்ற கல்லூரி மாணவர், தனது நண்பர் ஆரோன் டுஷாபேவுடன் இணைந்து, 'வின்செங்கா (WinSenga)' எனும் மொபைல் ஆப்பினை உருவாக்கியுள்ளனர்.
உலகின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் பொருளாதார நெருக்கடியும், போதிய அளவில் மருத்துவக் கருவிகள் இல்லாமையும், பிரசவத்தின் போது பிறக்கும் குழந்தைகளும், தாய்மார்களும் இறந்து போவதற்கு காரணமாய் அமைகின்றன. இதன் காரணமாகவே இவர்கள், இந்த மொபைல் ஆப்பினை உருவாக்கியுள்ளனர். பழைய கருவியான பின்ஹார்ட் ஹார்னை நவீனப்படுத்தி, மொபைல் போனுடன் பொருத்தி, இந்த ஆப்பினை ஆன் செய்தால், குழந்தையின் இதயத்துடிப்பை, மிகத்துல்லியமாக தெரிந்துகொள்ள முடிகிறது. மொபைலை, ஹெட் போனுடன் கனெக்ட் செய்வதால், தாயாலும், குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget