புத்தம் புது நவீன பேட்டரி கண்டுபிடிப்பு

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், ஆயுள் முழுக்க தாங்கும் திறன் கொண்டிருக்கும் பேட்டரியை கண்டறிந்திருக்கின்றனர். ஆய்வாளர்கள் கண்டறிந்த இந்த பேட்டரி நானோவையர் தொழில்நுட்பம் பயன்படுத்தி 100,000 முறை சார்ஜ்
செய்ய முடியும்.

இந்த பேட்டரியை சார்ஜ் செய்யும் போது சிறிதளவு மின்சாரமும் வீணாகது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டரியில் நானோவையர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நானோவையர்களானது மனித முடியை விட ஆயிரம் மடங்கு மெலிதானதாக இருக்கும். நானோவையர்கள் அதிகளவு சர்ஃபேஸ் ஏரியா கொண்டிருப்பதால் எலெக்ட்ரான்களை சேமித்து டிரான்ஸ்ஃபெர் செய்ய ஏதுவாக இருக்கும்.

இந்த திட்டம் வெற்றி பெற்று இதன் விலை குறைவாக இருந்தால் இந்த தொழில்நுட்பத்தினை ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்ளெட் போன்ற கருவிகளை சார்ஜ் செய்யவும் பயன்படுத்த முடியும். இந்த தொழில்நுட்பமானது 3 மாதங்களில் சுமார் 200,000 முறை சார்ஜ் செய்யப்பட்டதாகவும், இருப்பினும் பேட்டரியில் எவ்வித கோளாறும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget