விஜய் நடித்த பத்ரி படத்தில் தமிழுக்கு வந்தவர் பூமிகா. அதன்பிறகு ரோஜாக்கூட்டம், ஜில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்தவர்
தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த களவாடிய பொழுதுகள் படத்திலும் நடித்தார். ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. பின்னர் திருமணம் செய்து கொண்ட பூமிகா, அவ்வப்போது நடித்தும் வருகிறார்.
அந்த வகையில், தற்போது இந்தியில் நீரஜ் பாண்டே இயக்கி வரும் எம்.எஸ்.தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி -என்ற படத்தில் நடிக்கிறார். கதைப்படி தோனியாக நடிக்கும் சுதாஷ்ந்த் சிங் தேஜ் புட்டின் அம்மாவாக நடிக்கிறாராம் பூமிகா. அவரது கெட்டப்கூட சற்று நரைமுடியுடன்தான் சித்தரிக்கப் பட்டுள்ளதாம். அதேசமயம், டம்மியான அம்மா வேடமாக இல்லாமல் பூமிகாவுக்கு சேலஞ்சிங்கான காட்சிகளும் இந்த படத்தில் நிறைய உள்ளதாம்.

கருத்துரையிடுக