சரியான டெய்லரை கண்டுபிடிப்பது எப்படி

அனேகமாக எல்லா பெண்களுக்குமே இந்தப் பிரச்னை உண்டு. சரியான டெய்லரை தேர்ந்தெடுக்கும் முன் பின்வரும்  விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.


1. நம்பிக்கை

நீங்கள் தேர்ந்தெடுத்த டெய்லர் நம்பகமானவரா எனப் பாருங்கள். அதிலும் விலை உயர்ந்த துணிகளைக் கொடுக்கும் போது அதிக  கவனம் வேண்டும். அந்த டெய்லர் அந்த ஏரியாவில் பிரபலமானவரா எனப் பாருங்கள். தையல் கூலி சற்றே அதிகமாக  இருந்தாலும் கவலை வேண்டாம். உங்கள் துணிகள் நல்லபடியாக தைத்து வர வேண்டும் என யோசியுங்கள்.

2. சரியான ஃபிட்டிங்

உங்கள் நட்பு வட்டத்திலோ, அக்கம் பக்கத்திலோ நல்ல டெய்லர் பற்றி விசாரியுங்கள். அவர்கள் தைத்துக் கொண்டதில் ஃபிட்டிங்  மிகச் சரியாக இருப்பதாகச் சொன்னால் அந்த டெய்லரிடம்
நீங்களும் தைக்கக் கொடுக்கலாம்.

3. சரியான தகவல்

உங்களுக்கு என்ன தேவை என்பதை டெய்லரிடம் தௌிவாகப் புரிய வையுங்கள். ஒருமுறைக்கு இருமுறை அவருக்குப் புரிகிற  மாதிரி சொல்லலாம்.

4. அளவு

ஒவ்வொரு டெய்லரும் ஒவ்வொரு விதத்தில் அளவெடுப்பார்கள். அப்படி அளவெடுக்கும் போது நீங்கள் எந்தவித  அசவுகரியத்தையும் உணரக்கூடாது. உதாரணத்துக்கு ஆண் டெய்லர்கள் பெண்களுக்கு அளவெடுக்கும் போது மேலோட்டமாக சில  அளவுகளை மட்டும் எடுப்பார்கள். இதனால் உடல் வடிவத்துக்கேற்ற சரியான ஃபிட்டிங் வராமல் போகலாம். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget