கபாலி மில்லியன் பில்லியன் சாதனைகள்

யு டியூப் வந்த பிறகு நமது கணக்கு வழக்கு பழக்கங்களைக் கூட அமெரிக்க கணக்கு வழக்க பழக்கப்படி மில்லியன், பில்லியன் என ஃபாலோ செய்து விடுவார்கள் போலிருக்கிறது. யு டியூபில் 'கபாலி' டீசரின் மகத்தான சாதனை, மில்லியன்,
பில்லியன் பற்றித் தெரியாதவர்களைக் கூட தெரிய வைத்துவிடும் போலிருக்கிறது.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு மே 1ம் தேதி வெளியான 'கபாலி' படத்தின் தமிழ் டீசர் இதுவரை 2 கோடி பார்வைகளைக் கடந்து இன்னும்..இன்னும்..போய்க் கொண்டிருக்கிறது. படம் வெளிவர இன்னும் ஒரு மாதம் இருக்கிறது, அதற்குள் அந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே போகலாம். இதனிடையே, இசை வெளியீடு சமயத்தில் படத்தின் 2 நிமிட டிரைலரை வெளியிடயும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. டிரைலர் வந்தால் அது என்னென்ன சாதனைகளைப் படைக்கப் போகிறதோ...

'கபாலி' தெலுங்கு டீசரும் 30 லட்சம் பார்வைகளைக் கடந்து தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இத்தனைக்கும் 'கபாலி' படம் தெலுங்கில் டப்பிங் ஆகித்தான் வெளியாக உள்ளது. நேரடிப் படங்களை விட ஒரு டப்பிங் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா என மிரண்டு போய்க் கிடக்கிறது டோலிவுட்.

'கபாலி' மலாய் டீசரும் 3 லட்சம் பார்வைகளை ஃபேஸ்புக்கில் கடந்திருக்கிறது. டீசரையே திரும்பத்..திரும்ப..இத்தனை முறை பார்த்தவர்கள் படத்தையும் திரும்பத் திரும்பப் பார்த்தால் வசூல் எப்படி இருக்கும்..?
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget