'கபாலி' படத்தின் வியாபாரமும், வசூலும் ஒரு மகத்தான சாதனையைப் படைக்கப் போகிறது என இப்போதே ஆரூடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சுமார் ஒரு மாதம் முன்பு வெளியான ஒரே ஒரு டீசர் ஏற்படுத்திய
அதிர்வலையே அதற்குக் காரணம். படம் பற்றிய வேறு எந்தத் தகவல்களும் பெரிதாக வெளிவராத சூழ்நிலையில் 'கபாலி' மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மலாய் மொழியில் வெளியீடு என்பதில் இருக்கும் ஆச்சரியமான தகவல் ஒரு புறம் வர, இன்னும் வேறு மொழிகளிலும் படத்தை அடுத்தடுத்து டப்பிங் செய்து வெளியிடலாமா என்று கூட படக்குழு யோசித்து வருகிறார்களாம். தெலுங்கு டீசருக்கும் கிடைத்த வரவேற்பும் அங்கும் படம் மீதான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.
ரஜினிகாந்த் தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலவி வேறு ஒரு ரூபத்தில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் இந்தப் படம் இதுவரையில் வந்த அவருடைய படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் என்று சொல்கிறார்கள்.
படம் பற்றி வரும் வியாபாரத் தகவல்களும், மற்ற மொழி உரிமைத் தகவல்களும் 'கபாலி' படத்தின் கணக்கை மேலும் மேலும் கூட்டிக் கொண்டே போகிறது. 'பாகுபலி' படம் அசத்திய அளவிற்கு 'கபாலி'யும் அசத்துவார் என்றே அனைவரது கணிப்பும் ஒரே மாதிரி இருக்கிறது.

கருத்துரையிடுக